டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜயசேதுபதியை ஹீரோ ஆக்கியவர் சீனு ராமசாமி. அதையடுத்து அவர் இயக்கிய இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்தார் விஜயசேதுபதி. ஆனால் திருப்பதி பிலிம்ஸ் தயாரித்த அந்த படம் வெளிவர முடியாத சிக்கலில் கிடக்கிறது. அதனால் மீண்டும் உடனடியாக விஜய சேதுபதியிடம் கால்சீட் வாங்கி தர்மதுரை என்ற பெயரில் ரஜினி பட டைட்டீலில் ஒரு படத்தை இயக்கி முடித்து விட்டார் சீனுராமசாமி. முழுக்க முழுக்க மதுரை மண்வாசணை கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் டாக்டருக்கு படித்து விட்டு கிராமத்துக்கு வந்து இலவச மருத்துவ சேவை செய்யும் வேடத்தில் விஜய சேதுபதி நடித்துள்ளார்.
அதோடு, நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா விஜயசேதுபதியுடன் ஜோடி சேர்ந்ததை அடுத்து இந்த படத்தில் இன்னொரு முன்னணி நடிகையான தமன்னா அவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அதோடு, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டான்கே என மேலும் இரண்டு நடிகைகளும் முக்கிய கேரக்டர்களில் நடித் துள்ளார். இப்படத்தின் அனைத்துகட்ட வேலைகளும் முடிவடைந்து விட்ட நிலையில், ஜூலையில் திரைக்கு வர இருந்தது. ஆனால் கபாலி வெளியாவதை அடுத்து ஆகஸ்ட்டுக்கு ரிலீஸ் தேதியை மாற்றி விட்டனர். இந்நிலையில், இப் படத்தின் இசை வெளியீடு ஜூலை 27-ந்தேதி சென்னையில் நடக்கயிருக்கிறது.