ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு காலத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்து பரபரப்பாகப் பேசப்பட்டவர். இசைக் கோர்வைகளினால் அதிகம் ரசிக்கப்பட்ட அவருடைய பாடல்கள் ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்குப் போரடித்தன. அவருடைய பாடல்களை அவரே காப்பியடித்ததால் வந்த விளைவு அது. கடந்த சில வருடங்களாக ஹாரிஸ் ஜெயராஜால் பெரிய ஹிட்டுகளையும் கொடுக்க முடியவில்லை. இசையைப் பொறுத்தவரையில் துப்பாக்கி படத்திற்கப் பிறகு ஹாரிஸ் பெரிய ஹிட்டுகள் எதையும் கொடுக்கவில்லை. கடந்த நான்கு வருடங்களில் வெறும் 9 படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைத்துள்ளார்.
ஹாரிஸின் அந்த தோல்வி முகத்தை விரைவில் வெளிவர இருக்கும் இருமுகன் மாற்றி விடும் போலிருக்கிறது. நேற்று மாலை வெளியிடப்பட்ட இருமுகன் படத்தில் இடம் பெற்ற ஹலனா... பாடல் டீசர் ஒரே இரவில் யு டியூபில் 2 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. விக்ரம், நயன்தாரா இருவரின் நெருக்கமான நடிப்பில், அற்புதமான ஒளிப்பதிவில் அருமையான லொகேஷனில் இந்த 25 வினாடி பாடலே ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது என்றால் முழுமையான பாடல் வந்த பிறகு ரசிகர்களை நிச்சயம் கவரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருமுகன் படம் மூலம் ஹாரிஸ் மீண்டும் எழுந்து வரட்டும்.