இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விண்ட் சைம்ஸ் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'கட்டப்பாவ காணோம்'. 'ஈரம்' அறிவழகனிடம் உதவியாளராக இருந்த மணி செய்யோன் இயக்குகிறார். சிபிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். சாந்தினி இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர காளி வெங்கட், யோகிபாபு, மைம் கோபி, உள்பட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார், ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் நடிப்பது பற்றி ஐஸ்வ்ர்யா ராஜேஷ் கூறியதாவது:
எத்தனை கேரக்டரில் நடித்தாலும் சில கேக்டர்கள்தான் நம் மனசுக்கு நெருக்கமாக அமையும். அந்த வகையில் 'கட்டப்பாவ காணோம்' மீனு கேரக்டர் என் மனசுக்கு நெருக்கமான கேரக்டர். காரணம் மீனு பெரிய அல்ட்டரா மார்டன் பொண்ணும் இல்லை. அப்பாவி பெண்ணும் இல்லை. வாழ்க்கையை பிராக்டிக்கலாக பார்க்கிற பொண்ணு. நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படித்தான் என்பதால் மீனுவை எனக்கு பிடித்திருக்கிறது. படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டரில் நடித்தாலும் 'கட்டப்பாவ காணோம்' படத்தில் நான் நானாக நடிக்கிறேன். என்கிறார் ஐஸ்வர்யா.