தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூனுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைப் போல் கேரளாவிலும் ரசிகர்கள் ஏராளம். இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த சரைய்னோடு திரைப்படம் மலையாளத்தில் யோதாவ் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட போது கேரள ரசிகர்கள் முதல் நாளில் அப்படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்தனர். கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சரைய்னோடு திரைப்படம் 24 திரையரங்குகளில் 50வது நாளைக் கடந்துள்ளது. ஏற்கனவே சரைய்னோடு திரைப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் 112 திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கேரளாவிலும் சரைய்னோடு அரை சதம் அடித்துள்ளது அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினரிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு மலையாள ரசிகர்களுக்கு அல்லு அர்ஜூன் நன்றி தெரிவித்துள்ளார்.