தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரோகித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான கோல்மால் படங்களின் வரிசையில் விரைவில் கோல்மால்-4 உருவாக இருக்கிறது. இம்முறை கோல்மால்-4 படத்தின் தலைப்பை ‛கோல்மால் அகைன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜய் தேவ்கன் முதன்மை ரோலில் நடிக்க உள்ளார். ‛கோல்மால்-4' படத்திலும் கரீனா நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் தற்போது கரீனா கர்ப்பமாக இருப்பதால் இப்படத்தில் நடிக்க மாட்டார் என தெரிகிறது.
இதனிடையே அவருக்கு பதிலாக ஆலியாபட் அந்த ரோலில் நடிப்பார் என தெரிகிறது. இயக்குநர் ரோகித், ஆலியாவை சந்தித்து இப்படத்தில் நடிப்பது பற்றி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் கோல்மால்-4 ஆலியா பட் நடிப்பது பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. கோல்மால்-4 படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.