Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனவளர்ச்சி குன்றிய மாணவனின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

16 ஜூலை, 2016 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Vijay-meet-mentaly-challenged-student

தனது நலனில் அக்கறை கொள்ளும் ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் விஜய். அவருக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திராவிலும் சமீபகாலமாக அதிகப்படியான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அந்த வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பறிந்து அதற்கேற்ற கதைகளாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறார் விஜய். அதனால்தான் அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களுமே ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றன.


மேலும், யாராவது ரசிகருக்கு ஒரு பிரச்சினை என்றாலும் உதவிக்கரம் நீட்டும் விஜய், உடல்நிலை பாதிக்கப்பட்ட ரசிகர்கள் தன்னை பார்க்க ஆசைப்பட்டால் அவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கு சென்றே சந்தித்து சந்தோசப்படுத்தி வருகிறார்.


இந்நிலையில், நடிகர் மைம் கோபியினால் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு மூளை வளர்ச்சி இல்லாத கல்லூரி மாணவன், விஜய்யை தான் சந்திக்க வேண்டும் என்று விரும்பினாராம். இந்த தகவலை விஜய்யின் 60வது படத்தில் தற்போது வில்லனாக நடித்து வரும் மைம் கோபி, அவரிடம் தெரிவித்தாராம்.


அப்போது, அந்த பையனை எப்போது வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள் என்று கூறினாரம் விஜய். அதையடுத்து, அந்த மாணவனை படப்பிடிப்பு தளத்துக்கு ஒருநாள் தன்னுடன் அழைத்து சென்றாராம் மைம்கோபி. அப்போது அந்த மாணவனுடன் அன்போடு பேசிய விஜய், அவனுடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டாராம். தனது நீண்டநாள் ஆசையை விஜய் நிறைவேற்றியதை அடுத்து அந்த மாணவன் மிகப்பெரிய மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in