Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணம் கூடிவரும் நிலையில் கவர்ச்சி படங்களை வெளியிடுவது யார்? சமந்தா அதிர்ச்சி

16 ஜூலை, 2016 - 13:04 IST
எழுத்தின் அளவு:
Samantha-upset-over-glamour-photos

தமிழ் நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வருகிறார்கள். காதலுக்கு நாக சைதன்யாவின் தந்தை நடிகர் நாகார்ஜூனா சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில் விரைவில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது என்றும் கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுத்த பிறகு திருமணம் நடக்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. காதலையோ, திருமண நிச்சயதார்த்தத்தையோ, திருமணத்தையோ அவர்கள் தரப்பிலிருந்து யாரும் நேரடியாக ஒப்புக் கொள்ளவில்லை. அதனை மறுக்கவும் இல்லை.


இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் சமந்தா நடித்த சில சிறிய படங்களில் இடம்பெற்ற அவரது கவர்ச்சிப் படங்களை தேடி எடுத்து இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள். குறிப்பாக அவர் தமிழில் அறிமுகமான ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய 'மாஸ்கோவின் காவிரி' படத்தின் கவர்ச்சி ஸ்டில்களை பதிவிட்டு வருகிறார்கள். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த போதும், விளம்பர படங்களில் நடித்தபோதும் எடுக்கப்பட்ட படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.


இதனால் சமந்தா அதிர்ச்சி அடைந்துள்ளார். சமந்தாவிற்கு வேண்டாத சிலர் யாரும் இந்த வேலையை செய்கிறார்களா? அல்லது நாகசைதன்யாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி காதலில் விரிசல் உண்டாக்க வேண்டும் என்பதற்காக நாகார்ஜுனா குடும்பத்துக்கு வேண்டிய யாராவது செய்கிறார்களா என்று தெரியாமல் தவித்து வருகிறார் சமந்தா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in