ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 22ல் ஐதராபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரி கிருஷ்ணா, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிடவுள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரர் கல்யாண் ராமும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்த் கொள்கின்றார். மேலும் டோலிவுட்டின் பிரபலங்கள் பலருக்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 12ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் வெளியீடு செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ராம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் ஜனதா கேரேஜ் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தில் சமந்தா மற்றும் நித்யா மேனன் நாயகிகளாக நடிக்கின்றனர்.