பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'ரெமோ' படம் அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை, மேக்கிங் டீசர் ஆகியவற்றில் சிவகார்த்திகேயனின் பெண் வேடத்தைப் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். அவர் நிஜமான பெண் போலவே இருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். கதாநாயகி கீர்த்தி சுரேஷ் கூட படத்தில் முதல் ஹீரோயின் சிவகார்த்திகேயன்தான், நான் இரண்டாவது ஹீரோயின்தான் என்று சொல்லுமளவிற்கு சிவகார்த்திகேயனின் பெண் வேடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
அந்த பாராட்டில் தற்போது சமந்தாவும் சேர்ந்துள்ளார். நேற்று சமந்தா ரசிகர்களுடன் டிவிட்டரில் 'சாட்' செய்தார். அப்போது ஒரு ரசிகர், 'ரெமோ' படத்தின் முதல் பார்வையைப் பார்த்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றியது” எனக் கேட்டிருந்தார். அதற்கு சமந்தா, “அவர் எப்படி இவ்வளவு அழகாக தோற்றமளிக்கிறார், அதோடு அழகான கண்களுடன்...” என பதிலளித்துள்ளார். சமந்தாவின் இந்த பாராட்டிற்கு சிவகார்த்திகேயனும் நன்றி தெரிவித்துள்ளார். ஆக, சிவகார்த்திகேயனின் பெண் தோற்றம் இன்றைய முன்னணி நாயகிகள் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கிறது.