பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சமந்தாவிற்கும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவிற்கும் டிசம்பர் மாதம் திருமணம் என கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. இருவரது வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டதாகவும் அதனால் அவர்கள் விரைவிலேயே திருமணத்தை முடிக்க திட்டமிட்டதாகவும் சொன்னார்கள். ஆனால், இது போன்ற வதந்திகளுக்கு சமந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நேற்று ரசிகர்களுடன் சமந்தா 'சாட்' செய்தார். அப்போது சிலர் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் அவருடைய முடிவை வெளிப்படுத்துவதாக இருந்தன.
ஒரு ரசிகர், “ஜன்தா காரேஜ்' படம்தான் உங்களது கடைசி படமா, இது ஒரு வதந்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகக் கூடாது,” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, “கண்டிப்பாக வதந்திதான். நீண்ட காலங்களுக்கு இந்தத் துறையில் பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்,” எனக் கூறியிருந்தார்.
மற்றொரு ரசிகர், “உங்கள் கல்யாணம் டிசம்பரிலா” எனக் கேட்டிருந்தார். அதற்கு சமந்தா 'இல்லை' என ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார். அப்படியென்றால் சமந்தாவின் கல்யாணம் தள்ளிப் போகிறது அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.