'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபு நடித்த திருநெல்வேலி படத்தில் இளம் நாயகனாக அறிமுகமானவர் உதயா. அதன்பிறகு பூவா தலையா, ரா ரா ராஜசேகர், தலைவா உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது உத்தரவு மகாராஜா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் அண்ணனான இவர், இதற்கு முன்பு காதல், செண்டிமென்ட் போன்ற கதைகளில் நடித்து வந்தவர், இந்த படத்தில் முதன்முறையாக சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் நடிக்கிறார்.
கதைப்படி இவர் ஒரு சைக்கோவாக நடிக்கிறாராம். இதற்கு முன்பு எத்த னையோ சைக்கோ திரில்லர் படங்கள் வந்திருந்தபோதும் இந்த படம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்குமாம். சினிமாவில் தான் என்ட்ரியாகி பல வருடங்களாகியும் இன்னமும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்காத உதயா, இந்த உத்தரவு மகாராஜா படத்தில் நடிக்கும் சைக்கோ வேடத்தின் மூலம் ஒரு நல்ல இடத்தை பிடித்து விடலாம் என்று எதிர்பார்க்கிறாராம்.