இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சின்னதம்பி, சந்திரமுகி உட்பட பல வெற்றிப்படங்களைக் கொடுத்த பி.வாசு ஒருகட்டத்தில் ஓய்ந்துபோனார்.அவர் இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் தமிழில் பட வாய்ப்பு இல்லாமல்போனது.எனவே கன்னடத்துக்குப் போனார் பி.வாசு.அங்கே அவரது இயக்கத்தில் வெளியான சிவலிங்கா என்ற படம் பெரும் வெற்றிபெற்றது.
தற்போது 'சிவலிங்கா' கன்னட படத்தை தமிழுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்கள் செய்து, ஒரே நேரத்தில் பி.வாசுவே தமிழிலும், தெலுங்கிலும் இயக்குகிறார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் வாசுவின் மகன் சக்திவேல் வாசுதேவன் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார்.இறுதிச்சுற்று ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.
லைகா நிறுவனம் இப்படத்துக்கு பைனான்ஸ் செய்கிறது.கன்னட சிவலிங்கா படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகளை அப்படியே இதிலும் பயன்படுத்த உள்ளனர். 50 சதவிகித காட்சிகளை மட்டும் தமிழ் நடிகர் நடிகைகளை வைத்து புதிதாக எடுக்க உள்ளனர்.பழைய காட்சிகளுடன் மேட்ச் ஆக வேண்டும் என்பதற்கா சிவலிங்கா படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்குகிறது.