‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மலையாள திரையுலகில் ஷபி-ரபி என்கிற அண்ணன் தம்பி இயக்குனர்கள் ரொம்பவே பிரபலம்.. தனித்தனியாகத்தான் படங்களை இயக்குவார்கள்.. கதைவிவாதத்தில் மட்டும் ஒன்றாக பயணிப்பார்கள். தமிழ் ரசிகர்களுக்கும் கூட இவர்கள் நன்கு தெரிந்தவர்கள் தான்.. சரத்குமார் நடித்த 'தென்காசிப்பட்டணம்' படத்தை இயக்கியவர் தான் ரபி.. விக்ரம் நடித்த 'மஜா' படத்தை இயக்கியவர் ஷபி. மலையாளத்தில் இருவருமே முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியிருந்தாலும் இருவருக்கும் தனித்தனியாக பல வருட சோகம் ஒன்று தீராமல் இருக்கிறது..
1996ல் திரையுலகில் நுழைந்த ரபி, மோகன்லால் உட்பட முன்னணி நடிகர்கள் பலரை இயக்கியிருந்தாலும் இதுநாள்வரை மம்முட்டி படத்தை இயக்கியதில்லை. அதேபோல 2001ல் திரையுலகில் நுழைந்த இயக்குனர் ஷபியை பொறுத்தவரை மம்முட்டியை வைத்து பல படங்கள் இயக்கியிருந்தாலும் இன்னும் மோகன்லாலை வைத்து படம் இயக்கும் பாக்கியம் மட்டும் கிடைக்காமல் இருந்தது.. இப்போது அந்தக்குறை தீரப்போகிறது..