ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜென்டில்மேன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நானி, இயக்குனர் திரினந்த ராவ் இயக்கும் நேநு லோகல் படத்தில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் நவீன் சந்திரா ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
அந்தாள ராக்ஷசி, லக்ஷமிதேவிக்கு ஓ லெக்கூன்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நவீன் சந்திரா நேநு லோகல் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அக்டோபரில் துவங்கவுள்ளன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். ஆந்திராவின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.