Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'போங்கு' : கார் திருடர்களின் கதை!

14 ஜூலை, 2016 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Bongu-is-Car-stolen-story

'சதுரங்க வேட்டை' படத்திற்கு பிறகு ஒளிப்பதிவாளர் நட்டி நடிக்கும் படம் 'போங்கு'. இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ருஹி சிங் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர அதுல் குல்கர்னி, முனீஷ்காந்த், அர்ஜுன், ஷரத் லோகித்தஷ்வா, மயில்சாமி ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். பாடல்களை கபிலன், தாமரை, மதன் கார்க்கி எழுதியுள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.


கலை இயக்குனர் சாபுசிரிலிடம் உதவியாளராக இருந்த தாஜ் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் அளித்த பேட்டி: இது கார் திருடர்களின் கதை. கள்ளச்சாவி போட்டு டப்பா கார்களை திருடும் சாதாரண கார் திருடர்கள் அல்ல. கோடிக் கணக்கில் மதிப்புள்ள உயர்ரக கார்களை திருடுகிறவர்கள். அவர்கள் திருடும் காரைப்போல அவர்கள் வாழ்க்கையும் ரிச்சாக இருக்கும். அவர்கள் திருடர்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. வெவ்வேறு இடத்தில் இருப்பார்கள். உயர் ரக கார் அறிமுகமானால் அதன் டெக்கினிக்கை முதலில் கண்டுபிடிப்பார்கள். பின்னர் பக்காவாக பிளான் பண்ணி திருடுவார்கள். அதை சரியான நெட்ஒர்க்கிடம் ஒப்படைத்து விட்டு பணத்தை வாங்குவார்கள். மறுநாள் சகஜ வாழ்க்கைக்கு வந்துவிடுவார்கள். இப்படிப்பட்ட 4 ஹைடெக் திருடர்கள் பற்றிய கதை. நட்ராஜ், ருஹிசிங், அர்ஜூன், மூனீஷ்காந்த் ஆகியோர்தான் அந்த கார் திருடர்கள்.


படத்தில் ரோல்ஸ் ராய் கார் ஒன்று ஒரு கேரக்டராகவே வரும். இதற்காக இந்தியா முழுவதும் தேடி ஐதராபாத்தில் உள்ள அந்த காரின் பிரமாண்ட ஷோரூமில் படப்பிடிப்பு நடத்தினோம். கிளைமாக்ஸ் காட்சியை வெயில் கெழுத்தும், புழுதி பறக்கும் வெட்டவெளியில் படமாக்கினோம். ஹாலிவுட் தரத்தில் படம் உருவாகி வருகிறது. காமெடி கலந்த ஆக்ஷன் படம். என்கிறார் தாஜ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in