Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: தமிழ் சினிமாவின் முதல் குழந்தை நட்சத்திரம் பேபி சரோஜா

14 ஜூலை, 2016 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Baby-Saroja-:-First-Child-Artist-in-Tamil-Cinema

நாடக காலங்களிலும் சரி, திரைப்படங்களின் துவக்க காலத்திலும் சரி குழந்தை நட்சத்திரங்களுக்கென்று பெரிய முக்கியத்தும் இருந்ததில்லை. கை குழந்தைகள் காட்சி என்றால் பொம்மையை வைத்து சமாளித்து விடுவார்கள். சிறுவர்கள், சிறுமிகள் என்றால் உயரம் குறைவான நடிகர்களே நடித்து விடுவார்கள். சினிமா வளர்ந்த பிறகுதான் குழந்தை நட்சத்திரங்கள் வர ஆரம்பித்தார்கள். பிற்காலத்தில் ஸ்ரீதேவி, குட்டி பத்மினி, ஷாலினி, ஷாம்லி என குழந்தை நட்சத்திரங்கள் பிரபலமானார்கள்.


தமிழ் சினிமாவில் முதல் குழந்தை நட்சத்திரம் பேபி சரோஜா. 1937ம் ஆண்டு இயக்குனர் கே.பாலசுப்ரமணியம் இயக்கிய 'பாலயோகினி' என்ற குழந்தைகள் படத்தில் நடித்தவர் பேபி சரோஜா. முதல் குழந்தைகள் படமும் இதுதான். பேபி சரோஜாவுடன் ஆர்.பாலசரஸ்வதி, கே.ஆர்.செல்வம், ஆர்.பிரகதாம்பாள், ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் சரோஜா பெரும் புகழ் அடைந்தார். இவர்தான் பிற்காலத்தில் நடித்த சரோஜா தேவி என்பார்கள். அது தவறானது. எம்.ஜி.ஆருடன் நடித்த சரோஜாதேவி கன்னடத்தை சேர்ந்தவர். இந்த சரோஜா இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் சகோதரர் மகள்தான்.


'பாலயோகினி' வெளிவந்த பிறகு குழந்தைகள் பயன்படுத்தும் பைகள், பவுடர்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றில் பேபி சரோஜாவின் படங்கள் இடம்பெற்றது. குழந்தைகள் தொடர்பான விளம்பரத்தில் அவரது படங்கள் இடம்பெற்றது. காதர் இஸ்மாயில் அண்ட கம்பெனி என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து சோப்பு இறக்குமதி செய்து அதில் பேபி சரோஜா படத்தை போட்டது. அந்நிய பொருட்களை புறக்கணித்து வந்த பேபி சரோஜாவின் குடும்பம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது வரலாற்ற நிகழ்வு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in