தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் வீடியோவை இயக்கிய ரதிந்தரன் ஆர் பிரசாத், ஒரு முழுநீள திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கு இது வேதாளம் சொல்லும் கதை என்று பெயர் இடப்பட்டுள்ளது. இதில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ படங்களின் ஹீரோ அஷ்வின் மற்றும் மற்றும் ஆரண்ய காண்டம், ஜோக்கர் படங்களில் நடித்த குரு சோமசுந்தரம் இணைந்து நடிக்க உள்ளனர்.
ஜிப்ரான் இப்படத்திற்கான இசைப்பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். பிரபல ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான க்ரெக் ப்யூரிட்ஜ்( Greg Burridge) இப்படத்திற்கான சண்டை காட்சிகளை வடிவமைத்து, வில்லனாகவும் நடிக்க உள்ளார். இத்தாலியை சேர்ந்த ராபெர்டோ ஜாஜெர் (Robertto Zazzara) இப்படத்திற்கான ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார்.
இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கில் இம்மாதம் துவங்க உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. சண்டை காட்சிகளுக்காக அஷ்வின் உட்பட 30 மல்யுத்த வீரர்களுக்கு க்ரெக் ப்யூரிட்ஜ் பயிற்சி அளிக்கிறார். இது வேதாளம் சொல்லும் கதை படத்தை ஹோல் வைட் ஓர்ல்ட் பிலிம்ஸ் சார்பில் பஸாக் கேஸியர் பிரசாத் (Basak Gazier Prasad) தயாரிக்க உள்ளார்.