வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
சமுத்திரகனி இயக்கிய 'அப்பா' படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நஷாத். 17 வயதான நஷாத்தின் உயரம் இரண்டறை அடிதான். ஆனால் அவர் 'அப்பா' படத்தில் நடிப்பில் மிரட்டியிருப்பார். 'அப்பா' படத்தை தொடர்ந்து நஷாத்துக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால் அவர் பள்ளிக்கூடத்திற்கு படிக்கச் சென்று விட்டார்.
'மூடர் கூடம்' படத்தை இயக்கி, தயாரித்து, நடித்த நவீனின் சித்தப்பா மகன்தான் நஷாத். தற்போது நவீன் தயாரிக்கும் 'கொளஞ்சி' படத்தில் நடிக்க நஷாத்தை நவீன் அழைத்து வந்தார். அந்த படத்தில் சமுத்திரகனி தான் ஹீரோ. அப்போதே நஷாத்தின் நடிப்பை பார்த்து அதிசயித்த சமுத்திரகனி தன் 'அப்பா' படத்தில் நடிக்க வைத்தார். அப்பா முன்னதாக வெளிவந்து விட்டது. பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு 'கொளஞ்சி' படத்தில் நடிக்க ஆரம்பித்த நஷாத்துக்கு நடிப்பால் ஒரு வருட படிப்பு வீணாகிவிட்டது. தற்போது 11ம் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டார். நடிப்பு பாதிக்காத அளவில் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் நஷாத்.