Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கபாலி'-க்கு யு சான்று; ஜூலை 22ல் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

11 ஜூலை, 2016 - 19:30 IST
எழுத்தின் அளவு:
Kabali-got-U-certificate

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த கபாலி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற ஜூலை 22ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் கபாலி படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் ‛யு' சான்று அளித்திருக்கிறார்கள், இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.


தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் படம் ரஜினியின் ‛கபாலி'. ரஜினி மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக போராடுபவராக நடித்திருக்கிறார். இளமைகால ரஜினி, வயதான ரஜினி என இரண்டு விதமான தோற்றங்களில் மலேசிய டானாக அசத்தியிருக்கிறார் ரஜினி. படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. ஏற்னவே கபாலி படத்தின் டீசர், இந்திய திரையுலகில் ஒரு புதிய மைல் கல்லை ஏற்படுத்தியது. அதோடு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்றது.


ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார். முதன்முறையாக ரஜினி, அதிகளவிலான இளம் கலைஞர்களுடன் பணியாற்றியிருக்கிறார். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு பிரம்மாண்டமாய் தயாரித்திருக்கிறார்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள கபாலி படம், இன்று(ஜூலை 11-ம் தேதி) சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் கபாலி படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் ‛யு' சான்று கொடுத்துள்ளனர். கபாலி படம் 2 மணிநேரம் 32 நிமிடங்கள் ஓடக் கூடியாக இருக்கிறது.


இதனிடையே கபாலி படத்திற்கு யு சான்று கிடைத்த மகிழ்ச்சியோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 'கபாலி' படம் வருகிற ஜூலை 22-ம் தேதி ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


'கபாலி' படத்தின் மிகப்பெரிய பிரிமீயர் ஷோக்கள் அமெரிக்காவிலும், பிரான்சிலும் நடக்க இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் 4000-க்கும் அதிகமான தியேட்டர்களில் கபாலி படம் ரிலீஸாக இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in