அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சுபாஷ் கை இயக்கத்தில் சல்மான்கான், ஜாக்கி ஷெரப், மாதுரி தீட்சித் நடிப்பில் 1993ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‛கல்நாயக்'. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ‛சோலி கே பீச்சே...' பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. சஞ்சய் தத்தின் தயாரிப்பும் நிறுவனமும், இயக்குநர் சுபாஷ் கையின் முக்தா ஆர்ட்ஸூம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‛கல்நாயக் ரிட்டர்ன்ஸ்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து இயக்குநர் சுபாஷ் கை உறுதிப்பட கூறியிருப்பதாவது... ‛‛உண்மை தான், முக்தா ஆர்ட்ஸூம், சஞ்சய் தத்தின் தயாரிப்பும் இணைந்து ‛கல்நாயக் ரிட்டர்ன்ஸ்' படத்தை தயாரிப்பது என்று முடிவு செய்துள்ளோம். சஞ்சய் ஏற்கனவே ஏற்று நடித்த பல்லு பல்ராம் ரோலிலேயே நடிக்கிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சிறையிலிருந்து விடுதலையான பின்னர் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக இருக்கிறது. தற்போது படத்திற்கான கதை உருவாக்கும் பணி மும்முரமாய் நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை துவக்க எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார்.