ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரைப்படப் பாடல்கள் ரேடியோக்களில் ரசித்த காலம் ஒன்று இருந்தது. அதன் பின் அந்த இடத்தை தொலைக்காட்சி பிடித்தது. தற்போதைய மொபைல் உலகத்தில் அந்த இடத்தை யு டியூப் பிடித்துக் கொண்டுள்ளது. ஒரு படத்தின் பாடல்களை 'லிரிக் வீடியோ, ஒரிஜனல் வீடியோ' என எப்படிப் பிரித்துப் போட்டாலும் அதை ரசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. ஒரு சில இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கும், ஒரு சில நடிகர்களின் பாடல்களுக்கும் அளவுக்கதிகமான வரவேற்பு யு டியூப்பில் கிடைத்து வருகிறது.
இதற்கு முன் 'வேதாளம்'படத்தில் இடம் பெற்ற 'ஆளுமா டோலுமா...' லிரிக் வீடியோ 1 கோடி பார்வைகளையும், இன்னும் வெளிவராத 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் உள்ள 'தள்ளிப் போகாதே' பாடல் ஒன்றரை கோடி பார்வைகளையும், 'தெகிடி' படத்தில் இடம் பெற்றுள்ள 'விண்மீன்...' பாடல் 1 கோடி பார்வைகளையும், 'நானும் ரௌடிதான்' படத்தில் இடம் பெற்ற 'தங்கமே...' பாடல் 1 கோடி பார்வைகளையும், 'மாரி' படத்தில் இடம் பெற்ற 'டானு..டானு...' ஒன்றரை கோடி பார்வைகளையும், 'ஐ' படத்தில் இடம் பெற்ற 'என்னோடு நீ இருந்தால்...' பாடல் 1 கோடி பார்வைகளையும், 'பூக்களே சற்று...' பாடல் 1 கோடி பார்வைகளையும், 'நான் மெரசாலாயிட்டேன்...' பாடல் 1 கோடி பார்வைகளையும் கடந்துள்ளது.
இப்போது 'ரஜினி முருகன்' படத்தில் இமான் இசையில் யுகபாரதி எழுதி ஜித்தின் ராஜ், மகாலட்சுமி ஐயர் பாடியுள்ள 'உன் மேல ஒரு கண்ணு...' பாடல் ஒன்றரை கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. ஒன்றரைக் கோடி பாடல்களை இதுவரை ஒரு சில பாடல்கள் மட்டுமே கடந்துள்ளது. அதில் இந்தப் பாடலும் இடம் பெற்றுள்ளது.