பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அந்நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி. ராஜேந்தர் ஆகியோர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியது. கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் புதிய படத்தில் நடிக்க பல வளரும் ஹீரோக்கள் போட்டி போட்டனர். ஆனால், கடைசியில் அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு அமைந்தது. அவருடன் மீண்டும் மடோனா செபாஸ்டியன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தில் டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விஜய் சேதுபதி நடித்து ஏற்கெனவே 'இடம் பொருள் ஏவல், தர்மதுரை' ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. இதில் 'தர்மதுரை' படத்தின் இசை வெளியீடு இந்த வாரம் நடைபெற உள்ளது. 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் 'ஆண்டவன் கட்டளை' படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துவிட்டார். 'றெக்க' படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இன்று ஆரம்பமாகியுள்ள படம் தவிர மேலும் நான்கைந்து படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்து இந்த ஆண்டில் “சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி'' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இன்னும் மூன்று படங்கள் எப்படியும் இந்த ஆண்டில் வெளிவர வாய்ப்புள்ளது.