ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூப்பர் ஸ்டார் ரஜினி, ராதிகா ஆப்தா, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், கிஷோர் நடித்துள்ள கபாலி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படத்தை ரஞ்சித் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
தற்போது கபாலி பற்றித்தான் மீடியாக்கள் பரவலாக பேசி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராஜ் டி.வி கபாலி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை 3 நாட்கள் ஒளிபரப்புகிறது. 10 (இன்று), 17, 24 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஞாயிற்றுக் கிழமை ப்ரைம் டைமில் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கபாலி தயாரிப்பாளர், இயக்குனர், இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர் மற்றும் ரஜினி தவிர மற்ற நடிகர் நடிகைகளின் பேட்டிகள் ஒளிபரப்பாகிறது. கபாலி பட அனுபங்களையம் ரஜினி பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொள்கிறார்கள். நிகழ்ச்சியின் இடையில் கபாலி படத்தின் காட்சிகளும், டிரைய்லர் மற்றும் டீசர்களும் ஒளிபரப்பாகிறது. இந்த தகவலை ராஜ் டி.வியின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.