பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
உலகம் முழுவதும் ரூ600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த பாகுபலி படத்தின் வாயிலாக அப்படத்தின் நாயகன் பிரபாஸ் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் வெளிவந்தது. பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரபாஸின் வெற்றிப் படங்கள் பல தமிழ் மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகின்றது. அந்த வகையில் இயக்குனர் கருனாகரன் இயக்கத்தில் பிரபாஸ் காஜல் அகர்வால்,பிரபு மற்றும் பலர் நடித்த டார்லிங்க் எனும் தெலுங்கு படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய பத்திரகாளி பிலிம்ஸ் நிறுவனம் டார்லிங்க் படத்தை பிரபாஸ்-பாகுபலி என்ற பெயரில் தமிழில் வெளியிடுகின்றது. இப்படம் ஜூலை 15ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.