'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
மனைவி, குழந்தைகள் என்றாலே அதை தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையாக நினைக்கும் பிரபலங்கள்தான் அதிகம். பல ஹீரோக்கள் அவர்களது குடும்பம் பற்றிய புகைப்படங்களையோ, தகவல்களையே வெளியிடவே மாட்டார்கள். தமிழ்த் திரையுலகத்திலேயே இன்னும் பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால், பாலிவுட்டில் கேட்க வேண்டுமா என்ன ?. அவர்கள் வெளியிடவில்லை என்றால் கூட தனிப்பட்ட விதமாக பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளைக் கூட புகைப்படம் எடுத்து செய்தியாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் வேலை கொடுக்காமல் அந்த வேலையையும் தானே செய்திருக்கிறார் ஷாகித் கபூர். அவருடைய முதல் திருமண நாளான ஜுலை 7ம் தேதியன்று மனைவியுடன் உதட்டேடு உதடு வைத்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் அனைவரும் பார்க்கும்படியாகவே வெளியிட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கில் மட்டும் அந்தப் புகைப்படத்தை இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்திருக்கிறார்கள். 6000 பேர் கமெண்ட்டுகளும், 2500 பேர் ஷேரும், டிவிட்டரில் 2800 பேர் லைக் செய்தும், 588 பேர் ரிடிவீட்டும், இன்ஸ்டாகிராமில் மட்டும் 1,98,000 பேரும் லைக் செய்திருக்கிறார்கள். ஷாகித் ஏன் இப்போதும் பரபரப்பாகப் பேசப்படுகிறார் என்று தெரிகிறதா...?