ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'பிரேமம்' மலையாளப்படத்தில் மலர் டீச்சர் கதாபாதத்திரத்தில் நடித்ததால் ஒரே படத்தில் மிகப்பெரிய புகழ்பெற்றவர் சாய் பல்லவி. அதன் பிறகு மணிரத்னம் உட்பட பல இயக்குநர்கள் அவரை நடிக்க அணுகினார்கள். ஜார்ஜியாவில் டாக்டருக்குப் படித்ததால் எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. காளி என்ற மலையாளப்படத்தில் மட்டும் நடித்த சாய்பல்லவி, தற்போது தெலுங்கு படமொன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தெலுங்கில் பிரபலமான இயக்குனரான சேகர் காமுல்லா இப்படத்தை இயக்குகிறார். கிட்டத்தட்ட பத்து படங்களை இயக்கியுள்ள இவர் கடைசியாக இயக்கிய படம் 'அனாமிகா'. நயன்தாரா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படத்தை தொடர்ந்து வருண் தேஜா கதாநாயகனாக நடிக்கும் அமெரிக்க அப்பாயி தெலுங்கானா அம்மாயி என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில்தான் வருண் தேஜாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கிறார் சாய் பல்லவி! தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.