விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தவான். தற்போது இவர் ஜான் ஆபிரஹாமுடன் டிஸ்யூம்' படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இம்மாதம் 29ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே வருண் தவான், ஹாக்கி லெஜன்ட்டான தயான் சந்த் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா ஆகியோரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வந்தது. இதைப்பற்றி வருணிடம் கேட்டால் இல்லை என்று கூறியுள்ளார்.
இதுப்பற்றி வருண் மேலும் கூறியிருப்பதாவது... தயான் சந்த் மற்றும் அபினவ் படங்களில் எனக்கு எதுவும் வாய்ப்பு வரவில்லை. தற்போது வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகளவில் வெளிவருகின்றன. ஆனால் எனக்கு இப்போதைக்கு அது செட்டாகாது என்று நினைக்கிறேன். எனக்கும் சில வாய்ப்புகள் வருகின்றன, ஆனால் அதில் எனக்கு ஆர்வம் இல்லை. நல்ல வித்தியாசமான, அர்வமிக்க கதைகளில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். தற்போது நான் பயணிக்கும் நடிப்பு பாதையே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.