தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, சூர்யாவுடன் மாற்றான், தனுசுடன் மாரி என பல படங்களில் நடித்தவர் காஜல்அகர்வால். தற்போது விக்ரமுடன் கருடா, ஜீவாவுடன் கவலை வேண்டாம் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டபோதும், அஜித்துடன் மட்டும் இதுவரை நடிக்கவில்லை காஜல்அகர்வால். என்னை அறிந்தால் படத்தை கெளதம்மேனன் இயக்கயிருந்தபோதே கல்லெறிந்தார் காஜல். ஆனால் காத்து அனுஷ்கா பக்கம் திரும்பி விட்டதால், அவருக்கு அந்த வாய்ப்பு நழுவிப்போனது.
இந்த நிலையில், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 57-வது படத்தில் அனுஷ்கா ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியானபோதும், இப்போது காஜல் அகர்வாலும் அந்த படத்தில் நடிக்கிறார் என்றொரு செய்தி வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதோடு, இந்த படத்தில் அனுஷ்காவின் கால்சீட் குறித்த நேரத்தில் கிடைக்காததால் காஜல் அகர்வால் நடிக்கிறாரா? அல்லது இன்னொரு நாயகி வேடத்தில் அவர் நடிக்கிறாரா? என்பது பற்றிய உறுதியான தகவல்கள் தெரியவில்லை.