வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தற்பேது நடித்து வரும் படத்திலிருந்து சமந்தா விலகல் என நாம் ஏற்கெனவே சொல்லியிருந்தோம். அது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. சமந்தாவிற்கு இந்த வருடக் கடைசியில் திருமணம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், சமந்தாவிற்குப் பதில் அந்தக் கதாபாத்திரத்தில் அமலா பாலை நடிக்க வைக்க தனுஷ் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ், அமலா பால் ஜோடிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அது மட்டுமல்லாமல் தனுஷ் தயாரித்த 'அம்மா கணக்கு' படத்திலும் அமலா பால்தான் நாயகியாக நடித்திருந்தார்.
அப்படி ஒரு வேளை அமலா பால், 'வட சென்னை' படத்தில் நடிப்பது உறுதியானால் அது அவருக்கு மிகப் பெரும் அதிர்ஷ்டம். ஒரு நடிகைக்கு திருமணம் ஆன உடனேயே அவரை நாயகி கதாபாத்திரத்தில் நடிக்க யாரும் அழைக்க மாட்டார்கள். அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள்தான் அவர்களைத் தேடி வரும். அப்படியிருக்க அமலா பாலுக்கு தனுஷுடன் ஜோடியாக மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைப்பது அவருக்கு அதிர்ஷ்டமான ஒன்றுதான்.
விரைவில் இந்தப் படத்தில் நடிக்க உள்ள நட்சத்திரங்கள் குறித்து தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.