இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வாணி-ராணி தொடரில் வில்லனாக நடித்தவர் ஜெயராம். அதையடுத்து கண்ணாமூச்சு, கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்த அவர், தற்போது தாமரை தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோ-வில்லன் என டபுள் ரோலில் நடிக்கும் அவருக்கு வில்லன், மனநோயாளி, நல்லவன் என மூன்றுவிதமான கோணங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
இதுபற்றி ஜெயராம் கூறுகையில், சினிமா மோகத்தில்தான் நான் நடிக்க வந்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் சின்னத்திரைக்கு வந்தேன். வாணி ராணி தொடரில் அழுத்தமான வில்லன் வேடம் கிடைத்தது. அதன்பிறகு நடித்த தொடர்களிலும் நானே எதிர்பார்க்காத வித்தியாசமான வேடங்கள் கிடைத்த நிலையில், இப்போது நடித்து வரும் தாமரை தொடரில் டபுள் ரோல் கிடைத்தது.
இந்த தொடரில் நல்லவன்-கெட்டவன் என இரண்டுவிதமாக நடித்தபோதும் மனநோயாளியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இப்படி ஒரே சீரியலில் மூன்றுவிதமான டைமன்சனில் நடிக்கிறேன். இந்தமாதிரியான வாய்ப்பு கிடைப் பது அரிதான விசயம். அந்த வகையில் இந்த தாமரை தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.
மேலும், சீரியல்களில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் மனதளவில இருப்பதால் சினிமாவில் நல்ல கேரக்டர்களில் நடிப்ப தற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். விரைவில் படங்களில் கமிட்
டாகி விடுவேன் என்று நினைக்கிறேன். அதேசமயம், சினிமாவில் நடிகனாகி விட்டேன் என்பதற்காக சீரியல்களை தவிர்க்க மாட்டேன். இரண்டு மீடியாக்களிலும் நல்ல கேரக்டர்களாக செலக்ட் பண்ணி நடிப்பேன். முக்கியமாக, நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். நினைவுகூர்ந்து பேசும்படியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று கூறும் ஜெயராம், ராஜ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு புதிய சீரியலிலும் தற்போது கமிட்டாகியிருக்கிறாராம்.