இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
'அழகி', 'கன்னத்தில் முத்தமிட்டால்' போன்ற படங்களில் நடித்த நந்திதா தாஸ் கடைசியாக நடித்த தமிழ்ப்படம் 'நீர்ப்பறவை'. சீனு ராமசாமி இயக்கிய இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் நந்திதா தாஸ். பெண்கள் பிரச்சனைகளை மைய கருவாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதை திரைக்கதை வசனத்தை பிரபல எழுத்தாளரான தமயந்தி எழுதுகிறார்.
பெண் பாடலாசிரியரும், தனுஷ் நடித்த மரியான் படத்தின் வசனகர்த்தாவுமான குட்டி ரேவதி இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சமுத்திரக்கனி தயாரிப்பதோடு, அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். சமுத்திரகனிக்கு ஜோடியாகவே நந்திதாதாஸ் நடிக்கிறார்.
சமுத்திரக்கனிக்கு ஜோடி என்றாலும், வழக்கமான தமிழ்சினிமா கதாநாயகி பாத்திரமில்லையாம். சமுத்திரக்கனிக்கு சமமான ஒரு கேரக்டரில் நந்திதா தாஸ் நடிக்கிறாராம். 'அழகி', 'கன்னத்தில் முத்தமிட்டால்' ஆகிய படங்களில் நந்திதா தாஸ் ஏற்று நடித்த கேரக்டர்களை விட இப்படத்தில் அவருடைய கேரக்டர் மிக வலிமையானது என்று சொல்லப்படுகிறது!
வட சென்னை படத்தில் நடித்து வரும் சமுத்திரக்கனி, அடுத்து தாமிரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதையடுத்து நந்திதா தாஸ் உடன் இணையும் படத்தில் நடிக்க தேதி கொடுத்திருக்கிறார். இப்படத்தின் அதிகார்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.