ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மூன்று கான்களான சல்மான், ஷாரூக் மற்றும் அமீர். மூவரும் ஒரேக்காலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகாகி தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறார்கள். தற்போது அமீர்கான், மாவீரர் போகத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் ‛டங்கல்' படத்தில் போகத்தாக நடித்து வருகிறார்.
இப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் நடித்திருக்கிறார். நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. டங்கல் போஸ்டரை வெளியிட்டு பேசிய அமீர்கானிடத்தில், சமீபத்தில் சல்மான் கூறிய சர்ச்சை கருத்தான ரேப் கருத்து குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமீர்கான், சல்மான் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. பத்திரிகைகளில் வந்த செய்திகளை வைத்து பார்க்கும்போது சல்மான் பேசிய அந்த கருத்து துரதிருஷ்வசமானது, பொறுப்பற்றது என்று தான் கூறுவேன். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் இந்த விஷயத்தில் சல்மானுக்கு நீங்கள் அறிவுரை வழங்குவீர்களா என்று கேட்டபோது, அவருக்கு ஆலோசனை வழங்க நான் யார்? என்றார்.