தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
யு டியூப் தளம் நாம் நாட்டில் பிரபலமாகாத வரையில் எந்த இசையமைப்பாளர் எந்தப் பாடலில் இருந்து தங்களது பாடலைக் காப்பி அடித்தார்கள் என்பது தெரியாமல் இருந்தது. நாமும் அந்த இசையமைப்பாளர்தான் யோசித்து புதிதாக அந்த இசையை உருவாக்கினார் என நினைத்து கைதட்டி ரசித்திருக்கிறோம். ஆனால், அந்தக் கைதட்டல்கள் அனைத்தும் ஒரிஜனலாக அந்த இசையை உருவாக்கியவருக்கு போய்ச் சேராமல் போய்விடுகிறது. பல முன்னணி இசையமைப்பாளர்கள் கூட இப்படி 'காப்பி' அடித்திருக்கிறார்கள் என்துதான் உண்மை.
அனிருத் இசையமைத்துள்ள 'ரெமோ' படத்தில் இடம் பெற்றுள்ள 'நீ என் காதலன்...' என்ற பாடலை பத்து நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளார்கள். ஆனால், அந்தப் பாடல் காப்பியடிக்கப்பட்ட பாடல் என்ற சர்ச்சை இப்போது எழுந்துள்ளது.
யு டியூபில் “father vs. daughter beatboxing” என்ற வீடியோவிலிருந்து 'நீ என் காதலன்' பாடல் காப்பி அடிக்கப்பட்டுள்ளது. அப்பாவும் மகளும் இணைந்து தங்களுடைய வாயின் மூலம் சத்தத்தை வரவழைத்து இசையமைத்துள்ள அந்தப் பாடல் யு டியூபில் மட்டும் 95 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு பாடலை அனிருத் காப்பி அடித்துள்ளார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
'ரெமோ' படத்தில் இடம் பெற்றுள்ள 'நீ என் காதலன்' பாடலை யு டியூபிலும் வெளியிட்டுள்ளார்கள். அதில் 'Additional Beat Box sampled from Youtube' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.
அப்பா, மகள் இருவரும் தங்களது வாயால் இசையமைத்துள்ள பாடலை அனிருத் காப்பி அடித்தாரா என்பது குறித்து அனிருத்தே அவரது வாயைத் திறந்து சொன்னால்தான் உண்டு.