மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மிர்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், நைனா சர்வார் நடிக்கும் படம் 'அட்ரா மச்சான் விசிலு'. வருகிற 7ந் தேதி வெளிவருகிறது. கன்னட படங்களில் நடித்து வரும் நைனா சர்வார், தமிழில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். “நல்ல கதையும் கேரக்டரும் என்றால் பவர் ஸ்டாருக்கு ஜோடியாகவும் நடிக்கத் தயார்” என்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது: என் சொந்த ஊர் பெங்களூர். பி.காம்., ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கெனவே கன்னடத்தில் நான்கு படங்கள் முடித்துவிட்டேன். அட்ரா மச்சான் விசிலு எனக்கு முதல் தமிழ்ப் படம். நகைச்சுவையுடன் கூடிய பப்ளியான ஒரு ரோல். எனக்கு தமிழைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேசுவது சிரமம். அதனால் செட்டில் எல்லோருடனும் பேச சிவாதான் உதவினார். நானும் இயக்குநரும் சிவா மூலம்தான் பேசிக் கொள்வோம்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் பவர் ஸ்டார் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருக்கும் எனக்கும் சேர்ந்த மாதிரி சீன்கள் இல்லை. அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் நடிப்பேன். ஜோடியாகவும் தான். இதில் தயக்கம் ஏதுமில்லை. அட்ரா மச்சான் விசிலு பாடல் புரமோஷன் பார்த்து விட்டு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் எதையும் ஏற்கவில்லை. மனசுக்குப் பிடிச்ச மாதிரி பாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன். என்கிறார் நைனா சர்வார்.