தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எம்.ஜி.ஆர்., நடித்த பல சூப்பர் ஹிட் படங்களில் ‛ரிக்ஷாக்காரன்' படமும் ஒன்று. முதன்முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்தது என்றால் அது எம்.ஜி.ஆர்., தான். அந்த தேசிய விருதை எம்.ஜி.ஆரு.க்கு பெற்று தந்த படமும் ‛ரிக்ஷாக்காரன்' தான்.
கிருஷ்ணன் நாயர் இயக்கிய இப்படத்தில் எம்.ஜி.ஆர்., ரிக்ஷாக்காரனாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்., உடன் மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், சோ ராமசாமி என பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்நாதன் இசையமைப்பில் வெளிவந்த ‛‛கடலோரம் வாங்கிய காத்து..., அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்..., அழகிய தமிழ் மகள் இவள்...'' உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. சத்யா மூவிஸ் சார்பில் ஆர்எம் வீரப்பன் தயாரித்திருந்தார். 1971-ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பழைய படங்களை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி டிஜிட்டலில் மாற்றி அதை மீண்டும் திரையிட்டு வருகின்றனர். அப்படி திரையிடப்பட்ட படங்கள் இப்போதும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அந்த வகையில் எம்ஜிஆர்., சிவாஜியின் பல படங்கள் டிஜிட்டல் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், மாட்டுக்காரன் வேலன் போன்ற படங்களை தொடர்ந்து இப்போது ‛ரிக்ஷாக்காரன்' படமும் டிஜிட்டலில் உருவாகி வருகிறது.
கோவையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து வருகிறார். இவர் இப்போது ரிக்ஷாக்காரன் படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி டிஜிட்டலில் வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார். 2கே, டிடிஎஸ், சினிமாஸ்கோப்... என இன்றைய நவீன சினிமாவிற்கு ஏற்றபடி ரிக்ஷாக்காரன் படம் டிஜிட்டலில் வெளியாக இருக்கிறது.
முதற்கட்டமாக டிஜிட்டல் தரத்துடன் கூடிய டிரைலரை வெளியிட உள்ளனர். அதனைத்தொடர்ந்து படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்கின்றனர்.