ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது என்கிற நிலையில் தான் இருக்கிறார் அனன்யா.. திருமணத்திற்கு முன் அவரை தேடி விறுவிறுவென வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் என்றைக்கு அவர் தொழிலதிபர் ஆஞ்சநேயனை ரகசிய திருமணம் செய்துகொண்டாரோ, அன்றிலிருந்து அவருக்கு இறங்குமுகமாகத்தான் இருக்கிறது.. அதிக அளவில் படங்கள் கிடைக்கவில்லை என்பதைவிட, கிடைத்த படங்கள் ஹிட்டாகவில்லை என்பதே அவரது இந்த நிலைக்கு காரணம்..
இந்தநிலையில் பிருத்விராஜ் மற்றும் அவரது சகோதரார் இந்திரஜித் இருவரும் இணைந்து நடிக்கும் 'தியான்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வர, அதை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார் அனன்யா. இது பொறுக்காத சிலர், அனன்யா கர்ப்பமாக இருக்கிறார், விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள போகிறார் என கொளுத்திப்போட, இல்லவே இல்லை என பதறுகிறார் அனன்யா..
திருமணமான நடிகை என அனன்யாவை மலையாள சினிமாவில் யாரும் ஒதுக்காவிட்டாலும் கூட, அவரை ஒப்பந்தம் செய்யும் படங்களில் முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களாகத்தான் கொடுத்துவந்தார்களாம். “தற்போதுதான் பிருத்விராஜின் 'தியான்' படம் தேடி வந்துள்ளது.. இனி இதைப்பிடித்துதான் மேலே ஏறவேண்டும்.. இந்த நேரத்தில் குழந்தையை பற்றி யோசிக்கும் என்ன இருவருக்குமே இல்லை.. இப்படி ஒரு வதந்தியை யார் பரப்பினார்கள் என்றும் தெரியவில்லை” என கூறியுள்ளார் அனன்யா.