இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். என்றாலும் அவரை தமிழில் நாயகனாக அறிமுகம் செய்ய ஆசைப்பட்ட ஜெயராம், ஒரு பக்க கதை -என்ற படத்தில் அறிமுகம் செய்தார். அந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கினார். ஆனால் அந்த படம் தொடங்கப் பட்டு இரண்டு ஆண்டுகளானபோதும் இன்னும் திரைக்கு வந்தபாடில்லை. அதே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் மேகா ஆகாஷ்.
இந்நிலையில், அந்த படத்தை அடுத்து மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் காளிதாஸ் நாயகனாக கமிட்டானதை அடுத்து மேகாஆகாசும் கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கமிட்டாகி விட்டார். இதனால் மிகுந்த உற்சாகத்தில் நடித்து வரும் மேகா ஆகாசம், கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வரும் மஞ்சிமா மோகனைப்போன்று மேல்தட்டு இயக்குனர்களின் கவனத்தை இழுத்திருக்கிறார்.
மேலும், சமீபத்தில் தனுசுடன் அவரது போட்டோக்கள் வெளியானதை அடுத்து, சில டைரக்டர்கள் மேகா ஆகாஷிடம் கதை சொல்லி வருகிறார்களாம். ஆனால் இன்னும் எந்த புதிய படத்திற்கும் அவர் கால்சீட் கொடுக்கவில்லையாம். கார ணம், தனது படத்தில் நடித்து முடிக்கிற வரை வேறு படங்களில் ஒப்பந்தமாக வேண்டாம் என்று மேகா ஆகாசுக்கு கண்டிசன் போட்டிருக்கிறாராம் கெளதம்மேனன்.