ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மயக்கம் என்ன, இறைவி ஆகிய படங்களில் நடித்தவர் பூஜா திவேரியா. இதில் இறைவி படத்தில் கணவனை இழந்த பெண்ணாக நடித்த அவர், விஜயசேதுபதியுடன் பெட்ரூம் காட்சிகளிலும் நடித்திருந்தார். அதையடுத்து இப்போது காக்கா முட்டை மணிகண்டன் இயக்கியுள்ள குற்றமே தண்டனை படத்தில் முக்கியத்து வம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். கதைப்படி ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த ஒரு பெண் திடீரென கொலை செய்யப்பட, பின்னர் கொலையாளி என்னவாகிறார் என்பதுதான் கதையாம். இதில் கொலை செய்யப்படும் அந்த பெண் வேடத்தில் பூஜா திவேரியா நடித்துள்ளாராம்.
அந்த வகையில், இறைவி படத்தைப்போலவே இந்த படத்திலும் அவருக்கு குறைவான காட்சிகளே என்றபோதும், அவரது கதாபாத்தித்தை மையப்படுத்தியே கதை செல்கிறதாம். மேலும், இப்படத்தில் அவரது பர்பாமென்ஸைப் பார்த்த மணிகண்டன், அதற்கடுத்தபடியாக விஜயசேதுபதியை வைத்து தான் இயக்கியுள்ள ஆண்டவன் கட்டளை படத்திலும் பூஜாவுக்கு இன்னொரு நாயகி வேடம் கொடுத்திருக்கிறார். அதனால், இதுவரை கவனிக்கப்படாத நடிகையாக இருந்து வந்த பூஜா திவேரியா, இனிமேல் நான் கவனிக்கப்படும் நடிகையாகி விடுவேன் என்று உற்சாகத்தில் இருக்கிறார்.
மேலும், இதையடுத்து படம் சம்பந்தமாக தன்னை சந்திக்கும் டைரக்டர்களிடம், எனக்கு கதாநாயகி வேடம்தான் வேண்டும் என்று அடம் பிடிக்காமல், நல்ல கேரக்டர் எதுவாக இருந்தாலும் கொடுங்கள். முக்கியமாக, நான் இப்படித்தான் நடிப்பேன் என்று என்னைச்சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்ளவில்லை. விலை மாது வேடம் கொடுத்தாலும் அதற்கு என்ன தேவையோ அந்த பர்பாமென்ஸை கொடுக்க தயாராக இருக்கிறேன். எனக்கு நடிப்பதற்கு ஸ்கோப் இருந்தால் போதும் என்று கூறி வருகிறார் பூஜா திவாரியா.