பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மகன் ஜோதிகிருஷ்ண இயக்கிய 'கேடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இலியானா. அதன் பிறகு ஷங்கரின் 'நண்பன்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். தமிழில் அதிக வாய்ப்பு இல்லை என்றாலும் தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்தார்.
இலியானாவுக்கும் நயன்தாரா போன்று நிறைய காதல்கள் வந்து போனது. கடைசியாக அவர் தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாடலிங் போட்டோகிராபர் ஆண்ட்ரூவை காதலித்து வருகிறார். இந்த காதல் திருமணத்தில் முடிய இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேஷன் ஷோவில் இலியானாவை விதவிதமாக படம் எடுத்தார் ஆண்ட்ரு-ரூ-. அந்த படங்களுடன் சேர்த்து ஆண்ட்ரூவையும் பிடித்து விட்டது இலியானாவுக்கு. இப்போது அது திருமணத்தில் வந்து நிற்கிறது.
தனது திருமணம் பற்றி அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆகஸ்ட்டில் மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நிச்சயதார்த்ததும், நவம்பரில் மும்பையில் திருமணமும், ஆஸ்திரேலியாவில் திருமண வரவேற்பும் நடக்க இருக்கிறது. தற்போது இரண்டு இந்திப் படங்களில் நடித்து வரும் இலியானா புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.