ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் வந்த பிறகு பல்வேறு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தியது. இந்த போட்டிக்கு மலையாள நடிகர்கள் தங்கள் ஆதரவை அளித்தனர்.
நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு ஒத்துழைத்த மலையாள நடிகர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) கடிதம் எழுதியது. அந்த கடித்தில் “சினிமா தொழில் வளர்ச்சிக்காகவும், நடிகர்களின் நலனுக்காகவும் தென்னிந்திய நடிகர் சங்கமும் அம்மா அமைப்பும் இணைந்து செயல்பட விரும்புகிறோம்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
சமீபத்தில் நடந்த மலையாள நடிகர் சங்க (அம்மா) பொதுக்குழுவில் இந்த கடித்தை பொதுச்செயலாளர் மம்முட்டி படித்தார். அதன் பிறகு அனைத்து உறுப்பினர்களுடன் ஆதரவுடன் தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் இணைந்து செயல்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடிதம் எழுதவும் முடிவு செய்யப்பட்டது.