'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
பல படங்களில் காமெடியனாக நடித்தவர் லொள்ளு சபா ஜீவா. தற்போது ஆரம்பமே அட்டகாசம், கொம்பு என இரண்டு படங்களில் அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் ஆரம்பமே அட்டகாசம் படத்தில் கதாநாயகி சங்கீதாவுடன் 10 லிப்-லாக் காட்சிகளில் ஜீவா நடித்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு செய்திகள் வெளியாகின.
அதையடுத்து, அதுபற்றிய விவரமறிய ஜீவாவை தொடர்பு கொண்டபோது அவர் அளித்த பதில் இங்கே இடம்பெறுகிறது.
ஆரம்பமே அட்டகாசம் படம் காதல் கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சி உள்ளது. அந்த காட்சி உணர்ச்சிவசப்படும்போது எங்களையும் அறியாமல் மாறி மாறி உதட்டு முத்தம் கொடுப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. நானும், சங்கீதாவும் அந்த காட்சியில் அதிக ஈடுபாடு காட்டி நடித்தபோது, மாறி மாறி உதட்டு முத்தம் கொடுத்துக் கொண்டோம். அது ரொம்ப இயல்பாக வந்திருக்கிறது.
ஆனால் இந்த காட்சியில் முதலில் உதட்டு முத்தம் கொடுத்தது சங்கீதாதான். அதன்பிறகுதான் நான் கொடுப்பேன். ஆனால் அது பத்து முத்தங்கள் என்று சொல்ல முடியாது. எத்தனை என்று எங்களுக்கே தெரியாது. எடிட்டிங்கெல்லாம் செய்த பிறகு எத்தனை முத்தங்கள் உள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். முக்கியமாக, இளைஞர்களுக்கு அது பிடித்தமான காட்சியாக இருக்கும். சாதாரணமாக ஓரிரு உதட்டு முத்தக்காட்சி என்றாலே உற்சாகமாகி விடும் ரசிகர்கள், இந்த உதட்டு முத்தக்காட்சி சரமாரியாக இருப்பதைப்பார்த்து தியேட்டரில் சந்தோசத்தில் குதூகலிக்கப்போகிறார்கள் என்கிறார் ஜீவா.