பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் நாட்டில் சினிமாவில் நடித்து முதல்வர் ஆனவர்கள் எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா. ஆனால் கேரளாவில் இது தலைகீழாக நடக்கிறது. முதல்வராக இருந்த அச்சதானந்தன் சினிமா நடிகராகியிருக்கிறார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அவர் சார்ந்திருக்கும் இடது சாரி முன்னணி வெற்றி பெற்றது. அச்சுதானந்தன் மீண்டும் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு பிரனாய் விஜயனுக்குச் சென்றது. இதனால் கடுப்பில் இருந்த அச்சுதானந்தன் கேபினட் அமைச்சர் பொறுப்பும் வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்.
இந்த நிலையில்தான் அவர் நடிக்க வந்திருக்கிறார். கேம்பஸ் டைரி என்ற படத்தில் பன்னாட்டு குடிநீர் நிறுவனத்துக்கு எதிராக பேராடும் மாணவர்களை வழிநடத்தும் தலைவராக நடிக்கிறார். கேம்பஸ் டயரியை ஜீவன் தாஸ் இயக்குகிறார், சுதேவ் நாயர், ஜோய் மேத்யூ, சுராஜ் வெஞ்சிரமுடு, தலைவாசல் விஜய், சுனில் சுகடா நடிக்கிறார்கள், பிஜிபால் இசை அமைக்கிறார். வருகிற 9ந் தேதி கூத்துபரம்பா பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் அச்சதானந்தன் கலந்து கொண்டு நடிக்கிறார். 92 வயதில் சினிமாவில் அறிமுகமாகும் முதல் நடிகரும் அச்சுதானந்தன்தான்.