ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் வருகிற 22ந் தேதி வெளிவரும் என்று தெரிகிறது. படத்தின் எல்லா ஏரியாக்களும் விற்று விட்டது. கபாலியின் பாண்டிச்சேரி உரிமத்தை லெஜண்ட் மீடியா வாங்கியுள்ளது. இதன் உரிமையாளர் ஜி.பி.செல்வகுமார், பாண்டிச்சேரி கவர்னா கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமியை சந்தித்தார்.
அப்போது அவர் “பெரும் தொகை கொடுத்து 'கபாலி' உரிமையை வாங்கியுள்ளோம். பாண்டிச்சேரியில் திருட்டு விசிடி அதிகம். எனவே 'கபாலி' மட்டுமல்ல எந்த படத்தின் திருட்டு விசிடியும் வராமல் பாதுகாப்பு தரவேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். அதோடு பாண்டிச்சேரி நகரின் தூய்மைக்கு பாடுபடுவோர்களுக்கு கபாலியின் முதல் ஷோவை இலவசமாக பார்க்க வைப்போம் என்றும் கூறினர். முதல்வர், கவர்னர் இருவரும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.