'போகன்' படத்தில் அரவிந்த்சாமி யார்? - Who is Aravindswamy in Bogan?
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'போகன்' படத்தில் அரவிந்த்சாமி யார்?

01 ஜூலை,2016 - 17:19 IST
எழுத்தின் அளவு:

சோஷியல் மீடியா வந்த பிறகு அக்கப்போர்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சினிமாவுக்கு சம்மந்தமே இல்லாத ஆட்கள் இல்லாம் கையில் ஒரு மொபைலை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் அலைய ஆரம்பித்துவிட்டனர். இப்படிப்பட்ட ஆட்களால் திரையுலகில் அநியாயத்துக்கு குழப்பம்.


ஒரு ஸ்டில் வெளிவந்தால் போதும், அதில் உள்ள நடிகரின் கெட்அப்பைப் பார்த்துவிட்டு அவர் இந்த கேரக்டரில் தான் நடிக்கிறார் என கதை கட்டுகிறார்கள். ஜெயம் ரவியும், அர்விந்த் சாமியும் போலீஸ் யூனிஃபார்மில் இருக்கும் 'போகன்' படத்தின் புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியானது. உடனே இருவரும் போலீஸாக நடிக்கிறார்கள் என்பது தொடங்கி படத்தின் முழுக்கதையையும் கற்பனையாக எழுதித் தள்ளினார்கள்.


உண்மையில், 'போகன்' படத்தில் ஜெயம் ரவி மட்டுமே போலீஸாக நடிக்கிறார். ரசிகர்களை குழப்புவதற்காக அரவிந்த்சாமிக்கும் காக்கியை மாட்டி விட்டிருக்கிறார்கள். 'ரோமியோ ஜூலியட்' படத்தைத் தொடர்ந்து லக்ஷ்மண் இயக்கும் இப்படத்தின் முதல் பாதி முழுக்க ஜெயம் ரவிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாதியில் அர்விந்த் சாமியின் அட்டகாசங்கள் இருக்குமாம். ராஜ வம்சத்து கடைசி வாரிசாக இப்படத்தில் அர்விந்த் சாமி நடிக்கிறாராம். லைக் ஃபாதர் லைக் சன் என்ற அயல்நாட்டு படத்தின் இன்ஸ்பிரேஷன்(ஈயடிச்சான் காப்பி) தான் இந்தப்படம் என்கிறார்கள்.


Advertisement
சுந்தர்.சி படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்சுந்தர்.சி படத்துக்கு இசையமைக்கும் ... ‛வீரப்பன்' படத்திற்கு எதிர்ப்பு - வீரப்பன் பற்றி தானே படம் எடுக்க போகிறார் முத்துலட்சுமி ‛வீரப்பன்' படத்திற்கு எதிர்ப்பு - ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film s 3
    • சி-3
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அனுஷ்கா ,ஸ்ருதி ஹாசன்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film koodita edangalai nirapuga
    Tamil New Film Bogan
    • போகன்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ஹன்சிகா மோத்வானி
    • இயக்குனர் :லக்ஷ்மண்
    Tamil New Film Pattinapakkam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in