அரசியலில் இறங்க மாட்டேன் : பிரகாஷ்ராஜ் | தனுஷ் படம் முடிந்ததும் பிஜூமேனன் படத்தை இயக்கும் நாதிர்ஷா | 'ஸ்பைடர்' வலையிலிருந்து மீண்ட மகேஷ் பாபு | காலா ஜூன் 7-ல் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மீண்டும் பாலிவுட்டில் ஸ்ருதிஹாசன் : புதிய படம் ஆரம்பம் | பாலியல் வன்கொடுமை : தூக்கு தண்டனையே சரி : விஷால் | யூ-டியூப்பில் நேரலையில் பேசுகிறார் கமல் | ரஜினி கட்சியில் ஆனந்தராஜ்? | பிரபாஸ் படத்தில் இணைந்த இன்னொரு நாயகி | சினிமாவில் செக்ஸ் தொல்லை : ரம்யா நம்பீசன் ஒப்புதல் |
தென்னிந்திய திரை உலகிற்கு வழங்கப்படும் சைமா(SIIMA) 2016 விருது வழங்கும் நிகழ்ச்சி 6வது முறையாக சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றது. ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இவ்விழாவில் நேற்று(ஜூன் 30) தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பாகுபலி மற்றும் ஸ்ரீமந்துடு படங்கள் தலா 6 விருதுகளை அள்ளின.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரை உலகைச் சேர்ந்த பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்ட இவ்விழாவில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர் - மகேஷ் பாபு (ஸ்ரீமந்துடு)
சிறந்த நடிகை - ஷ்ருதிஹாசன் (ஸ்ரீமந்துடு)
விமர்சக ரீதியில் சிறந்த நடிகர் - அல்லு அர்ஜூன் (ருத்ரம்மாதேவி)
விமர்சக ரீதியில் சிறந்த நடிகை - அனுஷ்கா (ருத்ரம்மாதேவி)
சிறந்த இயக்குனர் - ராஜமௌலி (பாகுபலி)
சிறந்த துணை நடிகர் - ராஜேந்திர பிரசாத் (ஸ்ரீமந்துடு)
சிறந்த துணை நடிகை - ரம்யா கிருஷ்ணன் (பாகுபலி)
சிறந்த வில்லன் நடிகர் - ராணா (பாகுபலி)
சிறந்த நகைச்சுவை நடிகர் - வெண்ணிலா கிஷோர் (பலே பலே மகாதேவோ)
சிறந்த அறிமுக நடிகர் - அகில் (அகில் தி பவர் ஆஃப் ஜூவா)
சிறந்த அறிமுக நடிகை - ப்ரக்யா ஜெய்ஸ்வால் (கஞ்சே)
சிறந்த அறிமுக இயக்குனர் - அணில் ரவிபுடி (பட்டாஸ்)
சிறந்த இசையமைப்பாளர் - தேவிஸ்ரீ பிரசாத் (ஸ்ரீமந்துடு)
அதிகம் விரும்பப்பட்ட பாடல் - ராமா ராமா (ஸ்ரீமந்துடு)
சிறந்த ஒளிப்பதிவாளர் - செந்தில் குமார் (பாகுபலி)
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் - விஜய் ரெட்டி, சஷிதேவ் ரெட்டி (பலே மஞ்சி ரோஜூ)
சிறந்த நடன இயக்குனர் - ஜானி (டெம்பர்)
சிறந்த பாடலாசிரியர் - சித்தாராமா சாஷ்த்ரி (கஞ்சே)
சிறந்த பின்னணி பாடகர் - சாகர் (ஸ்ரீமந்துடு)
சிறந்த பின்னணி பாடகி - சத்யா யாமினி (பாகுபலி)
தென்னிந்திய திரை உலகின் யூத் ஐக்கான் - சமந்தா
சவுத் சென்சேசன் - சுதீர் பாபு