ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி, வம்சம் படத்தில் அறிமுமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பழம்பெரும் நடிகர் 'காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா இப்போது நடிக்க வந்திருக்கிறார். மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் அவர் அறிமுகமாகிறார். 'அபிராமி' என்ற இயற்பெயரை 'தான்யா' என்று மாற்றிய வரும் மிஷ்கின் தான். மிஷ்கின் படம் தொடங்குதற்கு முன்பே அடுத்த படத்திலும் கமிட் ஆகிவிட்டார் தான்யா.
'மொழி', 'அபியும் நானும்', 'பயணம்' போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் கடைசியாக 'உப்புகருவாடு' படத்தை இயக்கினார். தற்போது அவர் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க தான்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 'சேதுபதி' படத்தை தயாரித்த வான்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவு செய்கிறார், விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். பொன்.பார்த்திபன் வசனம் எழுதுகிறார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.