தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் என்ட்ரியாகி ரம்மி, அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும் என பல படங்களில் நடித்தபோதும், காக்கா முட்டை தான் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அடையாளம் கொடுத்தது. மேலும் அந்த படம்தான் தற்போது அவரை பாலிவுட்டுக்கும் கொண்டு சென்றிருக்கிறது. அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு காக்கா முட்டை மணிகண்டன் முக்கியமான டைரக்டராகி விட்டார். மேலும், அதையடுத்து விதார்த்தை வைத்து அவர் இயக்கியுள்ள குற்றமே தண்டனை படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.
இந்த படத்திலும் இன்னொரு காக்கா முட்டை என்று சொல்கிற அளவுக்கு அவருக்கு அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்துள்ளாராம் மணிகண்டன். இதுபற்றி ஐஸ்வர்யா கூறுகையில், என்னைப்பொறுத்தவரை மரத்தை சுற்றி டூயட் பாடும் கதாநாயகி வேடங்களை விட, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிப்பதில் தான் ஆர்வமாக உள்ளேன். இரண்டாவது நாயகி வேடம் என்றாலும் எனக்கு கவலையில்லை. அந்த வகையில், இந்த குற்றமே தண்டனை படத்தில் இன்னொரு நாயகியாக பூஜா திவாரியாவும் உள்ளார். என்றாலும் எனக்கு கதையோடு கலந்த வேடம். அதனால் காக்கா முட்டை எப்படி எனக்கு பெயர் வாங்கித்தந்ததோ அதேபோல் இந்த குற்றமே தண்டனை படமும் என்னை பேச வைக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.