நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
'ஆள்' படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கி உள்ள படம் 'மெட்ரோ'. சிரிஷ், பாபி சிம்ஹா, சத்யா, செண்ட்ராயன், மாயா, துளசி நடித்திருந்த இந்தப் படத்திற்கு ஜோகன் இசை அமைத்திருந்தார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். சென்னை போன்ற பெரு நகரங்களில் செயின் பறிப்பு திருடர்கள் எப்படி உருவாகிறார்கள். அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாக இருந்து பதிவு செய்திருந்தது படம். கடந்த 24ம் தேதி வெளியான இந்த படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் தற்போது லாபத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. வெற்றி சந்திப்பையும் நடத்தி முடித்து விட்டார்கள்.
தற்போது இந்தப் படத்தை அதன் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார். தமிழில் இயக்கிய ஆனந்த கிருஷ்ணனே தெலுங்கிலும் இயக்குகிறார். சிரிஷ் நடித்த கேரக்டரில் நாக சைதன்யா நடிக்கலாம் என்று தெரிகிறது. சத்யா நடித்த நெகட்டிவ் கேரக்டரில் இன்னொரு தெலுங்கு ஹீரோ நடிக்கிறார். பாபி சிம்ஹா அவர் நடித்த குணா கேரக்டரில் நடிக்கிறார். மெட்ரோ டெக்னிக்கல் டீம் அப்படியே தெலுங்கில் பணியாற்ற இருக்கிறது. தமிழில் சிறு பட்ஜெட்டில் உருவான படம் தெலுங்கில் பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது. படத்தின் இந்தி ரீமேக் உரிமையும் கணிசமான தொகைக்கு பேசப்பட்டு வருகிறது.