Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வானில் பறக்கத் தயாராகும் 'கபாலி'

30 ஜூன், 2016 - 10:52 IST
எழுத்தின் அளவு:

விமானத்தில் ஒட்டப்பட்டிருந்த 'கபாலி' போஸ்டர்கள்தான் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியது. ஏர்-ஏசியா நிறுவனம் 'கபாலி' படத்தின் பிரமோஷனின் ஒரு பகுதியாக தன்னுடைய விமானங்களின் வெளிப்புறங்களில் அசத்தலான 'கபாலி' பட போஸ்டர்களை விமானப் பணிமனைகளில் செய்யும் வேலை செய்தது வந்தது. இந்நிலையில் கபாலி போட்டோக்கள் ஒட்டிய ஏர் ஏசியா விமானங்கள் நாளை முதல் தனது விமான பயணத்தை தொடங்க உள்ளது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கபாலி விமானங்கள் பறக்க தயாராகிவிட்டன.


இதனிடையே கபாலி ஏர் ஏசியா விமானங்களை பற்றி தான் சாமானிய ரசிகர்கள் முதல் திரையுலகத்தினர் வரை அது பற்றித்தான் கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர். பொதுவாக ரஜினியைப் பற்றி ஏதாவது ஒரு கருத்து சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வரும் இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் அது பற்றி தன் பங்குக்கு ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.


“இது உயரமல்ல, ஆனால், இதுதான் நட்சத்திர அந்தஸ்து. ரஜினி குண்டு அல்ல, அவர் ஒரு அணுகுண்டு” என பதிவிட்டிருக்கிறார்.


'கபாலி' படம் பற்றிய தகவல்கள் செய்திகளும் படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்க நெருங்க அதிகரித்துக் கொண்டே வருகிறது.


Advertisement
சிம்பு வராததால் காத்திருக்கும் கௌதம் மேனன்சிம்பு வராததால் காத்திருக்கும் ... ஷாமின் நன்றியும், எதிர்பார்ப்பும்! ஷாமின் நன்றியும், எதிர்பார்ப்பும்!


வாசகர் கருத்து (11)

Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
01 ஜூலை, 2016 - 12:12 Report Abuse
Durai Ramamurthy மேலே பார்த்துக்கொண்டே இருக்காதடா, வண்டியத்தள்ளு வெய்யில் வர்றதுக்குள்ள இதுல பாதியவாச்சும் வித்தாதான் மத்தியானம் அரிசி வாங்கி சோறாக்கமுடியும்.
Rate this:
Dev - Adelaide,ஆஸ்திரேலியா
01 ஜூலை, 2016 - 08:25 Report Abuse
Dev In another newpaper it has been published that "for this advertisement Kabali production team paid 5 crore to Air-Asia" Who's money is that? And soon who is going to pay for that will come to know
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
01 ஜூலை, 2016 - 08:21 Report Abuse
Sanny இந்த விளம்பரத்து செலவும் எங்கள் டிக்கெட் செலவில் தான். இந்த விளம்பர பணம் கோடிக்குமேல் செலவு. இந்த பணத்தை அனாதை இல்லத்துக்கு கொடுக்கலாம். எப்படியும் இந்த தேர்தல் போல். பணம் கொடுத்தாவது படத்தை ஓட்டி வெள்ளிவிழா காண்பார்கள்.
Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
01 ஜூலை, 2016 - 07:42 Report Abuse
K.Sugavanam ஆகாயத்தில் கோட்டை கட்டி அங்கபோயி கூட படம் காட்டுவாங்க போல..ISS ல கபாலி படம் ரிலீஸ் எப்போது? அவங்க அங்க தனியா சுத்திக்கிட்டு இருக்காங்க..பொழுது நல்லா போகும் அவங்களுக்கு....20 நிமிடம் வர தாத்தா ரஜினி போஸை காட்டியே ஒப்பேத்துறாங்க..மீதி படத்தில வார யூத் ரசினி கெட்டப்பை காட்டவே இல்லையே..என்ன ரகசியம்??
Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
01 ஜூலை, 2016 - 06:46 Report Abuse
Lion Drsekar அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு தொப்பி போடலாம், ஜப்பானில் இருக்கும் ஜப்பானியர்களுக்கு கபாலி சட்டை கொடுக்கலாம், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருக்கும் அப்பாவி தமிழிழர்களுக்கு கபாலி காப்பி கொடுக்கலாம், நேபாளத்தில் இருக்கும் மலைகளில் கூட மிகப் பெரிய ஸ்டிக்கர் ஒட்டலாம். இறைவனும் பார்த்து மகிழ்வான். ஒரு பொருளை விற்பதற்கு வியாபாரிகள் எப்படியெல்லாம் முயற்சிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம், பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in