ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இதுவரை 99 படங்களை தயாரித்துள்ள தேனாண்டாள் பிலிம்ஸ், தங்களது 100வது படத்தை சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக தயாரிக்கிறது. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. மேலும், இதே நிறுவனம் தேனாண்டாள் என்டர்டெய்ன் மென்ட என்ற பெயரில் கச்சேரி மற்றும் மேடை நாடகங்களையும் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்நிறுவனம் சார்பில் தற்போது மேரா ஹோ மத்லப் நஹிதா -என்ற இந்தி நாடகம் செப்டம்பர் மாதம் 18-ந்தேதி சென்னையிலுள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ளது. இந்த நாடகத்தை ராகேஷ் ரெட்டி இயக்க, அனுபம் கேர், நீனா குப்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நாடகத்தின் முதல் பார்வையை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள் ளார். இந்த நாடகத்தின் மூலம் கிடைக்கும் வசூலை ஏழை குழந்தைகளின் கல்வி செலவுக்கு வழங்க தேனாண்டாள் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.